Category: இந்தியா

  • நடிகர் விஜய் சொகுசு கார் விவகாரம் – நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

    நடிகர் விஜய் சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதன்பின் கட்ட வேண்டிய வரி பாக்கியை செலுத்திவிட்டார். இருப்பினும், உயர்நீதிமன்ற…

  • குடிபோதையில் அடுத்தவர் வீட்டிற்குள் ஆடையின்றி நுழைந்த முன்னாள் எம்.பி.

    குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த அ.தி.மு.க. முன்னாள் எம்பி தாக்கப்பட்டதால் குன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 56). கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தார். மேலும் குன்னூர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி நாளில் அ.தி.மு.க. முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் குடிபோதையில் இரவு 10 மணியளவில் ஓட்டுப்பட்டறை…

  • யானையின் தாக்குதலில் சிறுவன் பலி – யானையை கைது செய்த பொலிஸார்

    இந்தியாவில் அசாம் மாநிலத்தில் சிறுவன் ஒருவனை மிதித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் இரண்டு யானைகளை காவல்துறையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். வளர்ப்பு யானை ஒன்று தாக்கியதாலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது. இதனால் குறித்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில முறைப்பாடு அளித்துள்ளனர். இந்த முறைப்பாடுக்கமைய, சிறுவனை தாக்கி கொலை செய்த யானையின் உரிமையாளரை கைதுசெய்த காவல்துறையினர் சிறுவனை மிதித்து கொலை செய்த காட்டு யானையையும் அதன் குட்டியையும் போலீசார் சிறைப்பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு…

  • நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு; இரண்டு வாரம் அவகாசம்

    சென்னை செய்திகள் இன்று: பிரபல நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு ரோல்ஸ்ராய்ஸ் சொகுசுக்கு காருக்கு வரி வசூலிக்க தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. பிரபல தமிழ் நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை. இதையடுத்து…

  • மின்னல் தாக்கிய போது செல்பி எடுத்த 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமையன்று இந்தச் சம்பவம் நடந்தது. மழை பெய்து கொண்டிருந்தபோது மிக உயரமான கண்காணிப்புக் கோபுரத்தின் மீதிருந்து அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கண்காணிப்புக் கோபுரமானது 12 நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரபலமான சுற்றுலா தலமான அமர் கோட்டையில் உள்ளது. மின்னல் தாக்கிய நேரத்தில் 27 பேர் அந்த கண்காணிப்புக் கோபுரத்தின் மீது இருந்துள்ளனர். மின்னல் தாக்கியதும் கோபுரத்தில் இருந்து பலர் கீழே…

  • நடிகர் ரஜினிகாந்த் எடுத்துள்ள அதிரடித் தீர்மானம்

    மக்கள் மன்றத்தை கலைத்து, இனிவரும் காலங்களில் ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக…

  • காதலித்த கணவனை விவாகரத்து செய்துவிட்டு மாமனாரை மணந்த பெண்

    இந்தியாவில் பெண் ஒருவர் தன்னுடைய மாமனாரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பவுடன் எனும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2016-ஆம் ஆண்டு பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திருமணம் முடிந்த 6 மாதத்தில் அவர்கள் இருவரும், விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதற்கிடையில், அந்த இளைஞரின் தந்தை திடீரென்று காணமல் போனதால், அந்த இளைஞர்…

  • 03 மாதங்களுக்கு முன் திருமணமான 19 வயது பெண்ணை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தாக்குதல் (வீடியோ)

    இந்தியாவில் திருமணமான இளம்பெண்ணை குடும்பத்தினரே மரத்தில் தொங்கவிட்டு கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராமத்தில் இந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணமான 19 வயது பெண் கணவர் வீட்டில் இருந்து வெளியேறி உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் அப்பெண்ணை மரத்தில் தொங்கவைத்து கம்பால் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த வீடியோவில் கிராமத்தினர் அனைவரும்…

  • சிவபெருமானின் சர்ச்சைக்குறிய ஸ்டிகர் செய்த இன்ஸ்டகிராமுக்கு சிக்கல்

    சிவபெருமானை சர்ச்சைக்குரிய வகையில் ஸ்டிக்கராக செய்ததற்காக, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் புகைப்படங்கள் பகிரும் பிரபல சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. பேஸ்புக்கை தாய் நிறுவனமாக கொண்ட இன்ஸ்டாகிராமில், பல பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்டிக்கர் வசதியில், சிவன் என தேடினால், சிவபெருமானின் கார்ட்டூன் ஒன்று, ஒரு கையில் மொபைல்போனும், மறுகையில் மதுபானமும் வைத்துள்ளது போன்ற ஸ்டிக்கர் ஒன்று உள்ளது. இன்ஸ்டாகிராமில் இருக்கும்…

  • வயிற்றில் கத்தியுடன் பொலிஸ் நிலையத்துக்கு வந்த இளைஞரால் பரபரப்பு

    இந்தியா செய்திகள் இன்று – இந்திய மகாரஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் வயிற்றில் குத்தப்பட்ட கத்தியோடு முகத்தில் வழிந்த இரத்தத்தோடும் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வயிற்றில் குத்திய கத்தியோடு காவல்நிலையம் நோக்கி ஓடியுள்ளார். சம்பவம் நடந்த இடத்துக்கும் காவல் நிலையத்துக்கு 500 மீட்டர் தான் தொலைவு என்பதால் வயிற்றில் குத்தப்பட்ட கத்தியோடு…