Category: இலங்கை

 • மிகவும் பட்டினியால் வாடும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்

  மிகவும் பட்டினியால் வாடும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்

  உலகில் மிகவும் பட்டினியால் வாடும் நாடுகள் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பாரதூரமான உணவு நெருக்கடியால் வாடுவதாக உலக உணவுத்திட்டத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலக உணவுத்திட்டம் கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக இலங்கையை பட்டினியால் வாடும் நாடுகள் பட்டியலில் சேர்த்தது. இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கை உட்பட உலகில் 19 நாடுகளில் உணவு பாதுகாப்பற்ற நிலைமை தொடரும் என உலக […]

 • மூடிய அறையில் நடந்த ராஜபக்ஷர்களில் கலந்துரையாடலில் பல தீர்மானங்கள்

  மூடிய அறையில் நடந்த ராஜபக்ஷர்களில் கலந்துரையாடலில் பல தீர்மானங்கள்

  நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களிடையே முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, அமெரிக்கா சென்றிருக்கும் பசில் ராஜபக்ச Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடலில் இணைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக […]

 • பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த யுவதி தொடர்பில் வௌியான செய்தி

  பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த யுவதி தொடர்பில் வௌியான செய்தி

  மீரிகம, தங்ஹோவிட்ட பிரதேசத்தில் கொள்ளையர்கள் குழுவொன்று மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பஸ்ஸில் பயணித்த யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் பெந்தொட ஹம்புருகல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஆவார். கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மீரிகம – தங்கோவிட்ட சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ​நேற்று (02) அதிகாலை […]

 • வாகனங்களின் விலையில் பாரியளவு சரிவு

  வாகனங்களின் விலையில் பாரியளவு சரிவு

  இலங்கையில் வாகனங்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தையில் சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்திய ஆல்ட்டோ காரின் விலை தற்போது 25 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. ஜப்பானிய ஆல்ட்டோ கார் ஒன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 46 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும், கடந்த காலங்களில் 65 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வேகன் ஆர் கார், 57 லட்சம் […]

 • சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக காத்திருப்பவரா? எப்போது கிடைக்கும்?

  சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக காத்திருப்பவரா? எப்போது கிடைக்கும்?

  சாரதி அனுமதி பத்திரம் அச்சிடுவதற்கான சிறப்பு அட்டையை இறக்குமதி செய்யத் தேவையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சிடப்பட வேண்டிய 9 லட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதி பத்திர விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. விண்ணப்பம் செய்யப்பட்ட ஐம்பதாயிரம் அட்டைகள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் நாளுக்கு நாள் புதிய சாரதி உரிமங்கள் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் […]

 • அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம்?

  அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம்?

  அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவிக்கின்றார். அரசாங்கத்திடம் பணம் இல்லாததே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, போராட்டம் […]

 • தாமரை கோபுரத்தில் சாத்தானை ஊக்குவிக்கும் நரக நெருப்பு இசை விழாவுக்கு எதிர்ப்பு

  தாமரை கோபுரத்தில் சாத்தானை ஊக்குவிக்கும் நரக நெருப்பு இசை விழாவுக்கு எதிர்ப்பு

  அண்மையில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட தாமரை கோபுரத்தில் அருகில் இன்றையதினம் நடைபெறவுள்ள இசை விழாவிற்கு (Lotus tower musical show) ‘ஹெல்ஃபயர்’ என்ற பெயர் பயன்படுத்தப்படுவதற்கு கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த இசை நிகழ்ச்சிக்கு கொழும்பு மாநகர சபை அனுமதி வழங்கியுள்ள போதிலும் ‘ஹெல்ஃபயர்’ என்ற பெயரைக் காட்சிப்படுத்த வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. எனவே அந்த நிகழ்வின் பெயரை மாற்றுமாறு அவர் ஏற்பாட்டாளர்களை வலியுறுத்தினார். தமது நகரத்தில் ஒரு நரக […]

 • மத வழிபாட்டு தலங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

  மத வழிபாட்டு தலங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

  மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்துவது தொடர்பில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மதவழிபாட்டு தளங்களில் சூரிய மின் உற்பத்தி படலங்களை பொருத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கல்வி இராஜாங்க அமைச்சர், மற்றும் மேலும் சில அமைச்சுக்களை பிரதிநிதித்துவ படுத்தும் உயர்நிலை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இந்திய கடன் உதவியின் கீழ் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 • கோதுமை மா விலை மேலும் உயர்வு? பாண் விலை 500 ரூபா?

  கோதுமை மா விலை மேலும் உயர்வு? பாண் விலை 500 ரூபா?

  எதிர்வரும் நாட்களில் கோதுமை மா விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்தையில் தற்போது கோதுமை கிலோ ஒன்று 410 ரூபா முதல் 420 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. கோதுமை மா விலை அதிகரிப்பு காரணமாக பல சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் சுமார் 2,000 வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் கோதுமை மா விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன. இதனால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மொத்த […]

 • எரிபொருள் விலை 100 ரூபாவால் குறையுமா? – எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி

  எரிபொருள் விலை 100 ரூபாவால் குறையுமா? – எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி

  பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியனவற்றின் விலைகளை லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்க முடியும் என எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுக கூட்டு தொழிற்சங்கங்களின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் நடைமுறையிலுள்ள விலை சூத்திரம் மற்றும் உலக சந்தை விலைகளின் அடிப்படையில் இவ்வாறு லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் விலையை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வரி மற்றும் லாபங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த விலை குறைப்பினை மேற்கொள்ள முடிந்த […]