Category: இலங்கை

 • வளி மாசடைவதல் – நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு – வீட்டை விட்டு வௌியேறும் போது முகக்கவசம் அணியவும்

  இலங்கையில் கொழும்பு, கண்டி, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அதிகளவு வளி மாசடைதல் காரணமாக அவதானமாக இருக்குமாறு சுற்றாடல் அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது. சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளின் போது முகக்கவசத்தை அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமூகத்தில், சுவாசம், நுரையீரல் அல்லது இதய ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட்ட பாதிக்கப்படக்கூடியவர்கள் விடயத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். காற்றின் தரம்…

 • திலினி பிரியமாலினியின் மர்ம உறுப்பில் காயம் ஏற்பட்டது எப்படி?

  சிறைச்சாலை அதிகாரிகள், தனது ஆடைகளை அவிழ்த்து தனது அந்தரங்க உறுப்புகள் உட்பட முழு உடலையும் சோதனை செய்ததாக திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகள் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். சிறைச்சாலையில் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் மூலம் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சோதனை காரணமாக அவரது அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

 • மக்களுக்கு அதிர்ச்சி செய்தி – அடுத்த ஆண்டு முதல் 06 மணித்தியால மின் வெட்டு?

  அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை தொடர்பில் நேற்று அமைச்சரவையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் மின்சார சபையின் நஷ்டத்தைக் குறைக்க மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள்…

 • வௌிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோருக்கான செய்தி

  வௌிநாட்டில் பணியாற்றிவரும் இலங்கை பணியாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு அனுப்பப்படும் பணத்துக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பணம் பலவந்தமாக இலங்கை ரூபாவாக மாற்றப்படுவதாகவும் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவையென மத்திய வங்கி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நியச் செலாவணி பணத்தை அவர்களது வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டு நாணயமாக வைத்திருக்கலாம் அல்லது அவர்களின் விருப்பப்படி இலங்கை ரூபாவாக மாற்றிக்கொள்ளலாம் எனவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

 • நாட்டில் வேகமாக பரவும் காய்ச்சல் – மக்களுக்கு அவசர அறிவித்தல்

  இலங்கையில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜி விஜேசூரிய மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய மருத்துவ ஆலோசனை பெறுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, வைரஸ் காய்ச்சலால் தினமும் சுமார் 40 குழந்தைகள் கொழும்பு லேடி…

 • இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நீல மாணிக்கம் தொடர்பான புதிய செய்தி

  இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நீல நட்சத்திர சபையர் மாணிக்கக்கல் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச இரத்தினம் மற்றும் நகை கண்காட்சி 2023 இன் முதல் பதிப்பை அறிவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நீல மாணிக்கக்கல் கொத்து இன்னும் விற்பனை செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு இரத்தினபுரியில்…

 • தனுஷ்க குணதிலக்க பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

  பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பிணையில் செல்ல சிட்னி நீதிமன்றம் அனுமதித்துள்ளது. 1 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பிணையில் செல்ல இன்றைய தினம்(17) சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டது. 29 வயதுடைய யுவதி ஒருவர் வழங்கிய பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு அமைய, தனுஷ்க குணதிலக்க கடந்த 6ஆம் திகதி அவுஸ்திரேலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, தனுஷ்க குணதிலக்கவிற்கான முதலாவது பிணை மனு கடந்த 7ஆம் திகதி…

 • ஜனவரி முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக கிடைக்கும்

  நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த மதிய உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வழமையைப் போன்று தேவையான அளவு உணவுக் கிடைப்பதில்லை என்பதனை அமைச்சர் நாடாளுமன்றில் முன்னதாக ஏற்றுக்கொண்டிருந்தார். இதற்கமையவே மதிய உணவுத்திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர்…

 • வாகனங்களின் விலை வீழ்ச்சி – புதிய விலை விபரம் வௌியானது

  நாட்டில் வாகனங்களின் விலைகள் குறைந்துள்ளதாக இலங்கை மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வட்டி வீதங்கள் அதிகரித்துள்ளமை மற்றும் உதிரிப்பாகங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக வாகனங்களின் விலைகள் குறைந்துள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறைவடைந்துள்ள வாகனங்களின் விலை பட்டியல் கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா விட்ஸ் 2017 Rs. 7,050,000 டொயோட்டா பெசோ 2017 Rs. 6,150,000 ஹொண்டா வெஷில் 2014 Rs. 7,650,000 ஹொண்டா பிஃட் 2011 Rs. 4,620,000 சுசிக்கி வெகன் ஆர்…

 • 634 பொருட்களின் விலைகள் அதிகரிப்பு – அதிவிஷேட வர்த்தமானி வௌியானது

  634 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்புசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று இரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.. இதன்படி இறக்குமதி செய்யப்படும் 634 பொருட்களின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கின்றன.