IMF இலங்கைக்கு 1.5 பில்லியன் நிதி வழங்க முடிவு; பங்குச் சந்தையும் அதிகரித்தது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


IMF இலங்கைக்கு 1.5 பில்லியன் நிதி வழங்க முடிவு; பங்குச் சந்தையும் அதிகரித்தது

இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் இணக்கப்பட்டடுக்கு வந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி எதிர்வரும் ஜூன் மாதம் கிடைத்தவுடன் இந்த நிதித்தொகை வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வினவியதற்கு,

கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து விடயங்களும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும், கடனை பெற்றுக்கொள்ளும் காலம் மற்றும் பெற்றுக் கொள்ளும் விதம் தொடர்பில் மாத்திரம் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டி இருப்பதாகவும் கூறினார்.

எதிர்வரும் சில தினங்களுக்குள் நற்செய்தி ஒன்றை அறிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் இன்று 6500 புள்ளிகளை கடந்தது.

கடந்த நான்கு மாதங்களின் பின்னரே அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் இவ்வாறு 6500 புள்ளிகளை கடந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினத்தை விட 58 புள்ளிகள் அதிகரித்தமையினாலேயே இன்று அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 6500 புள்ளிகளை கடந்ததுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணக்கப்பட்டடுக்கு வந்துள்ளதையடுத்து பங்குச் சந்தையில் இந்த அதிகரிப்பு நிகழந்துள்ளது.