IPL 2016: பஞ்சாப் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


IPL 2016: பஞ்சாப் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது

ஐபிஎல் போட்டியில் மொஹாலியில் நடந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான புனே சூப்பர் ஜயண்ட்ஸ், டேவிட் மில்லர் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதியது.

இதில் நாணயசுழற்சியில் வென்ற புனே அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் புனே அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களை எடுத்தது.

அதிகபட்சமாக டுப்லெசிஸ் 53 பந்துகளில் 67 ஓட்டங்களும், ஸ்டீவன் ஸ்மித் 26 பந்துகளில் 38 ஓட்டங்களும் குவித்தனர்.

இதையடுத்து 153 என்ற இலக்குடன் துடுப்பெடுத்து ஆடிய பஞ்சாப் அணியினர் 18.4 ஓவர்களில், 153 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.

முரளி விஜய் 49 பந்துகளில் 53 ஓட்டங்களும், வோஹ்ரா 33 பந்துகளில் 51 ஓட்டங்களும் எடுத்திருந்தனர். மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்து அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.

ஆட்டநாயகனாக பஞ்சாப் அணியின் வோஹ்ரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.