பிரியந்த குமார (Priyantha Kumara)என்ற இலங்கையர் பாகிஸ்தானில் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பல பாகிஸ்தானியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மனிதாபிமானமற்ற சம்பவத்திற்கு அவர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளில் இலங்கையிடம் மன்னிப்பு கேட்டபதைக் காணமுடிகின்றது.
அதேநேரம், சில இலங்கையர்களிடம் சிங்கள மொழியில் மன்னிப்புக் கோருவதையும் காணமுடிந்தது.
மேலும், இலங்கை பிரஜை பிரியந்த (Priyantha Kumara) படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மன்னிப்பு கேட்டும் லாகூரில் பாகிஸ்தானியர்கள நேற்று (04) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.