சு. க. தலைமையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கக் கோரும் மனு மார்ச் 13ல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மார்ச் (13) விசாரணைக்கு எடுப்பதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சு. க. உறுப்பினர்கள் இருவர் தாக்கல் செய்திருந்த மனு நேற்று (20) ஆராயப்பட்டது. இதன் போது இந்த மனு மீதான விசாரணையை முன்னெடுக்க முடியாதென சு. க. செயலாளர் ஆட்சேபனை முன்வைத்திருந்தார். இது தொடர்பில் தமது தரப்பு நியாயங்களை மார்ச் (13) முன்வைக்குமாறு நீதிமன்றம் மனுதாரர் தரப்பிற்கு உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *