அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

லீசிங் வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது என்பதால் ஒருபோதும் அதற்கு இடமளிக்க வேண்டாம் என பதில் காவல் துறை மா அதிபர் அனைத்த காவல் துறைக்குளம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

லீசிங் நிறுவனங்களுக்கு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.