அரசில் இருந்து விலகவும் தயார்

அமெரிக்காவுடன் அரசாங்கம் எம்.சி.சி ஒப்பந்தத்தை செய்து கொண்டால் அரசாங்கத்தில் இருந்து அந்த நிமிடமே விலகதயார் என விமல் வீரவன்ச தெரிவிக்கின்றார்.

கொழும்பில் உள்ள அவரது சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேற்படி கூறினார்.

எம்.சி.சி உடன்படிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா அரசாங்கம் தொடர்ந்தும் முற்சித்து வருவதாக விமல் வீரவன்ச தெரிவிக்கின்றார்.

இதேவேளை, குறித்த ஒப்பந்தம் தொடர்பில் ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழு நேற்று அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது.குறிப்பிடத்தக்கது.