ஆற்றில் விழுந்த சிறுவன் – காப்பாற்ற குத்த 07 சிறுமிகள் – 08 பேரும் பரிதாபமாக பலி

ஆற்றில் வீழ்ந்த சிறுவனை காப்பாற்றுவதற்கு 7 சிறுமிகள் ஆற்றில் குதித்ததால் 8 பேரும் உயிரிழந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
8 பேரின் சடலங்களும் நேற்று காலை ஆற்றிலிருந்து மீட்கப்பட்டன.

சோங்கிங் நகரிலுள்ள மிக்ஸின் ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த சிறார்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் ஞாயிறு பிற்பகல் ஆற்றங்கரையோரம் விளையாட சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்ததாக பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.

அதேவேளை ஆற்றுக்குள் பலர் வீழ்ந்ததைக் கண்டதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதையடுத்து 200 பேர் அடங்கிய மீட்புக் குழுவினால் பாரிய தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், 7 சிறுமிகள் மற்றும் சிறுவன் சடலங்கள் திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளன

சிறுவன் ஆற்றில் தவறி வீழ்ந்த நிலையில், அவனை காப்பாற்றுவதற்கு 7 மாணவிகளும் ஆற்றில் குதித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கோடைக்கால விடுமுறை ஆரம்பமாகும் நிலையில் தமது பிள்ளைகள் குறித்து பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் என சீன அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.