ஆவா குழு தலைவனின் பிறந்தநாள் கேக் வெட்டிய 26 இளைஞர்கள் கைது

ஆவா குழு தலைவரின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று (15) மாலை வேளை, சன்னாவின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

இதன் போது தகவலறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று,, கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 26 இளைஞர்களையும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.