இரண்டாவது தடவையாக கொரோனா ஏற்பட்ட பெண் – IDH வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அனுராதபுரம் – கெபிதிகொல்லேவ – ஹல்மில்லேவ பிரதேசத்தினை சேர்ந்த பெண்ணே மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் அனுராதபுரம் மருத்துவமனையில் இருந்து கொழும்பு ஐ டி எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

36 வயதுடைய குறித்த பெண் கடந்த மாதம் 18 ஆம் திகதி குவைட் நாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த பெண் குணமடைந்து வீடு திரும்பிய நிலையிலேஇ இவ்வாறு மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.