இரவு 10 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அனைத்தையும் வௌியிட முடியும்

பொது தேர்தலின் அனைத்து முடிவுகளையும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இரவு 10 மணிக்குள் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சகல தேர்தல் முடிவுகளையும் அறிவிப்பதற்கு மேலதிக காலம் தேவைப்படுமா என்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

நடைபெற்று முடிந்த தேர்தல் ஒத்திகையின் அடிப்படையில், ஒகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல் நிறைவு பெற்று 6 ஆம் திகதி இரவு 10 மணிக்கு முன்னர் சகல தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியும்.

அன்றைய தினம் எந்த கட்சி அல்லது கூட்டணி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது என்பது தொடர்பில் தெரிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளின் விபரம் அதன் பின்னர் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.