இலங்கை வக்பு சபையால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்

மதஸ்தலங்களை இன்று முதல் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை வக்பு சபை இது குறித்து சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

நேற்று கூடிய இலங்கை வக்பு சபை கூட்டத்தில் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் அனுமதிக்கேற்ப பள்ளிவாசல்களில் ஏற்கனவே கூடுவதற்கு குறிப்பிடப்பட்டுள்ள 30 என்ற எண்ணிக்கை ஆகக் கூடியது 50 நபர்கள் என அதிகரிக்கப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழுகை நடக்கக்கூடிய பள்ளிவாசல்கள் சிறியதாக இருந்தால் அந்த பள்ளிவாசலில் தொழக்கூடியவர்களின் எண்ணிக்கையில் 50 வீதமானவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.

சுகாதார அதிகாரிகள் கூட்டுத் தொழுகைக்கோஇ கூட்டு நடவடிக்கைகளுக்கோ இதுவரையில் அனுமதி வழங்கவில்லை.

இதன் காரணமாக ஐவேளை இமாம் ஜமாஅத், ஜும்ஆத் தொழுகை, நிகாஹ் மஜ்லிஸ் உள்ளிட்ட எவ்வித கூட்டு நடவடிக்கைகளுக்கும் மறு அறிவித்தல் வரை அனுமதிக்கப்படமாட்டாது.

பள்ளிவாசல்களை மக்களுக்காக திறப்பதற்கு முன்னர் அனைத்து நம்பிக்கையாளர்களும்இ நம்பிக்கைப் பொறுப்பாளர்களும் பொது சுகாதார பரிசோதகரின் எழுத்து மூல அனுமதியினைப் பெற்றிருக்க வேண்டுமென பணிக்கப்படுவதாகவும் இலங்கை வக்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.