இ.தொ.கா இதுவரை இழைத்த தவறை கூறிய ஜீவன்

தலைமைத்துவத்திற்கும், மக்களுக்கும் இடையிலான தொடர்பு இல்லாதிருந்தமையே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதுவரை இழைத்த தவறு என அந்த கட்சியின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதியொருவர் தெரிவு செய்ய வேண்டிய அவசியப்பாடுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எமது தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது எமக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். இறுதிமூச்சு இருக்கும்வரை மலையக மக்களுக்காகவே அவர் செயற்பட்டார்.

அவரின் கனவுகளை நிறைவேற்றுவதற்காகவே அவரின் ஜீவனாக ஜீவன் தொண்டமான் வந்துள்ளார்.

முன்கூட்டியே பிரசாரத்தை ஆரம்பிக்க இருந்தோம். எனினும் தந்தையின் இழப்பால் ஜீவன் ஆழ்ந்த கவலையில் இருந்தார். ஆனாலும் மக்களுக்காக அவர் பிரச்சாரத்துக்கு தயாராகிவிட்டார்.

தந்தைக்கான 30 ஆம் நாள் கிரியை முடிவடைந்ததும் அவர் 26 ஆம் திகதி முதல் பிரச்சாரக்களத்துக்கு வருவார்.” – என பிரச்சாரக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.