ஈஸ்டர் தாக்குதல் – கைது செய்யப்படவுள்ள சந்தேகநபர்கள்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் 237 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனரென, நேற்றைய ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 26 பேரை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதோடு, 8 பேரைத் தடுத்து வைத்து விசாரணை செய்துவரும் நிலையில், ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 63பேரைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதோடு, அவர்களில் 16 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.