ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் இறுதிக் கட்டத்தில்

தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு
நிதியளித்தது விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தி உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களுக்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பணம் பெறப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. ஜாலிய சேனரத்ன தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு இலங்கையில் உள்ள குழுவிற்கு இந்த தாக்குதல்களை நடத்துவதற்காக நிதியை அனுப்பி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று சேனரத்ன கூறினார்.

இலங்கையில் சட்டரீதியாகவும், சட்டவிரோதமாகவும் இயங்குகின்ற வர்த்தகங்களும் இத் தாக்குதல்களை நடத்துவதற்கு, அதன் செயல்பாடுகளுக்கு நிதியளித்தன.

21 ஏப்ரல் 2019 தாக்குதல்களுக்கு முன்னர் நிகழ்ந்த பல சம்பவங்கள் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையவை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சேனரத்ன கூறினார்.

விசாரணைகள் இறுதி கட்டத்தில் உள்ளன என்றும், விரைவில் மேலும் கைதுகள் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.