உலகம் அபாயகரமான கட்டத்தில் – உலக சுகாதார தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் புதிய மற்றும் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உலகெங்கிலும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த கொடிய தொற்றுப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பொருளாதார சீரழிவுகளை ஏற்படுத்தியதால் பல்வேறு நாடுகளும், ஊரடங்கை தளர்த்தி வரும் நிலையில், கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் இருந்தாலும், மக்கள் பெரும்பாலும் ஊரடங்கால் சோர்வடைந்து விட்டதால் உலகம் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.