ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் வௌியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று முதல் அமுலாகும் வகையில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

கடந்த 13 ஆம் திகதி முதல் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது