எழுந்த சர்ச்சையை அடுத்து உறுப்பினர்களுக்கு சஜித்தின் அதிரடி

பொதுத்தேர்தல் மேடைகளில் பேசும் பேச்சுக்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு அதன் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

நேற்று இரவு கொழும்பில் கட்சி உறுப்பினர்களை சஜித் அவசரமாக சந்தித்தார்.

அதில் பேசிய போது மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் தமது தரப்பினர் பொறுப்பற்ற முறையில் பேசிய பேச்சுக்களும் தமக்கு பாதகமாக அமைந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் முன்னாள் எம்.பி ஹரின் பெர்னாண்டோ, கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக சஜித் நேற்று இரவு பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.