கடும் நெருக்கடியில் சஜித் – பலர் விலகிச் செல்லும் நிலை

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் நெருக்கடி நிலைமை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுத் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் சார்பில் வேட்புமனு வழங்கப்பட்டுள்ள பலர் கட்சியை விட்டு வெளியேறி வருவதாக தெரிய வருகிறது.

இதுவரை பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இவர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் வெற்றி தொடர்பில் ஏற்பட்ட அவநம்பிக்கையே விலகலுக்கான காரணமாகும். தேர்தலுக்கு பணம் செலவிடுவதில் பலனில்லை என நினைத்து இவ்வாறு அதிகமானோர் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பலர் தலைமைத்துவம் தொடர்பில் மனவருத்தமடைந்து அந்த தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் சஜித் தரப்பிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மற்றும் முன்னாள் ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க ஆகியோர் விலகியிருந்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியில் அதிருப்பதி அடைந்த குழுவினர், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சஜித் தலைமையிலான புதிய கட்சி ஆரம்பித்து தனியாக பிரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.