கருணாவிடம் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவு

கருணா அம்மான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபரினால் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பிலே இவ்வாறு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தான் கொரோனாவை விட அபாயம் மிக்கவன் தான், 2 ஆயிரம், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவவீரர்களை ஆணையிரவு முகாமிலும், கிளிநொச்சி முகாமிலும் கொன்றுள்ளேன் என மக்கள் சந்திப்பொன்றில் வைத்து கருணா அம்மான் தெரிவித்தார்.

இது தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரால் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்து தொடர்பில் அரசியல் மட்டத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.