கருணாவுக்கு எதிராக களத்தில் குதித்த மற்றொரு தேரர்

தேசிய கல்விசார் சங்கசபை கருணா அம்மானுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்தது.

அந்த சங்கத்தின் தலைவராகிய பேராசிரியர் ஓமல்பே சோபித்த தேரரினால் இவ் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பின் ஊடகங்களுக்கு பேசிய தேரர், ‘கருணா அம்மான் படையினரைக் கொலை செய்ததாகக் கூறிய கருத்தை வாக்குமூலமாக எடுத்து பொலிஸார் விசாரிக்க வேண்டும்.

அப்படி செய்யாத பட்சத்தில் இந்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு சமன்’ என்றார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் உடடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரினால் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.