கருணா அம்மானுக்கு எதிராக அதிரடிக் கருத்தை வௌியிட்ட சஜித்

தமது அரசாங்கம் ஆட்சி அமைக்குமானால் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கருணா அம்மான் பயங்கரவாதி என்று அவர் தனு உரையில் கூறினார்.

பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்கள் கருணா கூறியுள்ள விடயத்தை ஏற்றுக் கொள்வார்களா என்றும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.