கருணா அம்மானுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்

கருணா அம்மான் பயங்கரவாதியாக இருந்தவேளை அநீதிகளில் ஈடுபட்டவர் எனினும் விடுதலைப் புலிகளிற்கு எதிரான போரில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தினார், என தெரிவித்துள்ள எஸ்.பி.திசநாயக்க இதன் காரணமாகவே அந்த அமைப்பிற்கு எதிரான போரில் அரசாங்கம் வெற்றிபெற முடிந்தது என தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் கருணா அம்மான் தீர்க்ககரமான சக்தியாக விளங்கினார் என அவர் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மானிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் இந்த விடயம் கவனத்திற்கு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.