கர்தினால் மெல்கம் ரஞ்சித் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கர்தினால் மெல்கம் ரஞ்சித் அரசியலில் தொடர்புபடுவதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.

மெதிரிகிரியவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்வின்போது அவர் இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பில் தாம் கர்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு தொலைபேசியின் ஊடாக தெரியப்படுத்தியதாகவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற உடனேயே கோட்டாபய ராஜபக்சவுக்கான ஜனாதிபதி வேட்பாளர் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

இதன்போது கர்தினால் மல்கம் ரஞ்சித் விடுத்த அறிக்கை ஒன்றும் கோட்டாபயவின் பிரசாரத்துக்கு உதவியது.

இதன்காரணமாக தொடர்ந்தும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்து வந்த பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கோட்டாவுக்கு ஆதரவளித்தனர் என்றும் ஹரின் பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.