கிளிநொச்சியில் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலி

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று மாலை மணல் கொண்டு சென்ற வாகனம் மீது படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 1 மணிநேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாமையால் காத்திருக்க நேர்ந்துள்ளது.

இந்த நிலையிலேயே பளை, கெற்பலியை சேர்ந்த திரவியம் இராமலிங்கம் (வயது 24) என்ற குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் பளை வைத்தியசாலை வளாகத்தில் பொது மக்கள் கூடியதால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாகவும், எனினும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மேலும், முகமாலை பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்ட போது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார் என பளை பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.