கிழக்கு மாகாணத்தில் 60 இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பெறுமதிமிக்க 60 இடங்கள் பலதரப்பட்ட குழுக்களின் செயற்பாடுகளால் அழிக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று 3 வது நாளாகவும் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட குண்டுதாரிகள் சிலர் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் கல்கிஸ்ஸையில் அமைந்துள்ள வீடமைப்பு தொகுதி ஒன்றில் ஒளிப்பதிவு செய்த காணொளி ஆணைக்குழு முன் நேற்று காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டது.

ஞானசார என்பவர் பேய் என சஹ்ரானினால் 2 தடவைகள் அந்த காணொளியில் கூறுகின்றமை தொடர்பில் தங்களது நிலைப்பாடு என்னவென ஞானசார தேரரிடம் ஆணைக்குழு இதன்போது கேள்வி எழுப்பியது.

அவர்களது வாழ்க்கை அல்லது கற்றல் தொடர்பில் கேள்வி எழுப்புவது தடை

தங்களுக்கு அது தொடர்பில் கதைக்க முடியாது.

அப்படியானால் நாங்கள் பேய்கள்

சஹ்ரான்கள் அடிப்படைவாத கற்பித்தலுக்கமைய பயிற்சி பெற்றதாக ஞானசார தேரர் அதற்கு பதில் வழங்கியுள்ளார்.

சஹ்ரான் போன்றவர்கள் வாழ்ந்த கிழக்கு மாகாணத்தில் தற்போது 60 தொல்பொருள் இடங்கள் பலதரப்பட்ட தரப்பினரின் செயற்பாடுகளால் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் ஏப்ரல் 21 தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார்