குருணாகல் வைத்தியசாலை பதில் பணிப்பாளர் பரீத் திடீர் இராஜினாமா

குருநாகல் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட வைத்தியர் என். பரீத் அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

தன் மீது இனவாத நோக்கத்துடன் சேறுபூசும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்

தாய்மார்களுக்கு சட்டவிரோத கருத்தடை நடவடிக்கை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீனுடன் தனது பெயரையும் இணைத்து சிலர் இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த சரத் வீரபண்டார அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பதில் பணிப்பாளராக வைத்தியர் என். பரீத் நியமிக்கப்பட்டார்.

கடந்த 5ம் திகதி வைத்தியர் என். பரீத் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

தான் ஒரு முஸ்லிம் என்பதனால் வைத்து தன் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டதன் காரணமாக அந்த பதவியை ராஜினாமா செய்வதாக வைத்தியர் பரீத் கூறியுள்ளார்