கேகாலை பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியில் பாரிய தீ (Video)

கேகாலை நகரில் உள்ள பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியின் மேல் மாடியில் சற்றுமுன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த தீ பரவலானது சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாகவும் தீயினை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பொது மக்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தீ பரவல் குறித்து தீயணைப்பு படைப்பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.