கொரோனா.. மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை ஏற்படும் நிலை உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார். 

பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன, தேர்தல் நடைபெறவுள்ளது, இவ்வாறான சூழலில் இன்றும் சுகாதார பரிந்துரைகள் அடங்கிய வழிகாட்டி வர்த்தமானியில் வெளியிடப்படாமை பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம், சுகாதார பரிந்துரைகளை உள்ளடக்கிய வர்த்தமானி இதுவரை வெளியிடப்படாமையினால் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.