கொரோனா வைரஸின் தற்போதைய நிலை – WHO வௌியிட்டுள்ள முக்கிய செய்தி

சர்வதேச ரீதியில் கொவிட் 19 வைரஸ் தொற்றின் மோசமான நிலை இன்னும் ஏற்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் அதன் தாக்கம் குறைவதற்கான எந்தவொரு அறிகுறிகளும் இதுவரை காணப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சோதனை செய்தல், அடையாளம் காணல் மற்றும் தனிமைப்படுத்த பேணுவதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

உலகளவில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றானது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மிக வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாத இறுதியில் தெற்காசியா மற்றும் ஆபிரிக்காவில் அதிகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

வைரஸைக் கட்டுப்படுத்துவதில் பல நாடுகள் முன்னேற்றம் கண்டிருந்தாலும், உலகளவில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.