சஜித் அணியின் வேட்பாளர் கைது

கற்பிட்டி – கந்தகுளிய பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை விநியோகித்துக்கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 4 ஆயிரம் தேர்தல் சுவரொட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் காவற்துறையினால் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் கல்பிற்டி நீதவான் நீதிமன்றில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் காவற்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.