சஜித் அணியில் இருந்து மற்றொரு முக்கிய நபர் விலகினார்

ஐக்கிய மக்கள் சக்தியில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளர் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநராக நிலூகா ஏக்கநாயக்க இவ்வாறு விலகியுள்ளார்.

இது குறித்து அவர் கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

அத்துடன் இதற்கான கடிதத்தை அவர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் வழமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.