சஜித் பிரேமதாஸ வௌியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

கொரொனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகக்குறைந்த அளவில் சலுகை வழங்கிய நாடு இலங்கை என ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் மக்களுக்கு உதவிகளை பெற்றுக்கொடுக்க ஒன்றினைந்தன.

மக்களுக்கு சலுகை வழங்க அமெரிக்காவின் டிமொக்ரடிக் கட்சி மற்றும் ரிபப்லிகன் கட்சியும் இணைந்து டொலர் ரில்லியன் 2.3 பணத்தை ஒதுக்கியுள்ளன.

தாம் ஆட்சிக்கு வந்ததும் நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 20 ஆயிரம் ரூபா நிதி உதவியை பெற்றுகொடுப்போம் என அவர் கூறினார்.

ஒரு குடும்பத்திற்கு 60 ஆயிரம் கொடுக்க வேண்டும் என நான் கூறிய போது ஏளனம் செய்தனர்.

ஆகக் குறைந்தது ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் கொடுத்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.