சீனாவின் அதிரடி – 77 நாடுகளிடம் கடன் தொகையை திரும்ப பெறாதிருக்க தீர்மானம்

கொவிட் 19 இற்கு எதிரான போராட்டத்தில் குறைந்த வளங்களைக் கொண்ட நாடுகளுக்கு உதவி வழங்கும் முகமாக திரும்ப செலுத்த வேண்டியுள்ள கடன் தொகையை இடைநிறுத்தியுள்ளது சீனா.

அபிவிருத்தியடைந்து வரும் 77 நாடுகளிடமிருந்து கடன் தொகையை மீளப் பெறுவதை சீனா இடைநிறுத்தியுள்ளது.

சீனாவின் உதவி வௌிவிவகார அமைச்சர் Ma Zhaoxu இன்று இதனை ஊடகங்களுக்கு தெரிவித்ததாக சரவதேச செய்திகள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் இந்த சலுகை எந்தெந்த நாடுகளுக்கு வழங்கப்படும் என்பதை சீனா குறிப்பிடவில்லை.

Source – https://www.thestar.com.my/aseanplus/aseanplus-news/2020/06/07/china-suspends-debt-repayment-for-77-developing-countries#.XtzfL7p8cBI.twitter