சுவர்கத்திற்கு செல்வதற்காக 10 வயது சிறுமி எடுத்த பயங்கர முடிவு

சொர்க்கத்திற்கு செல்வதற்காக 5ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தனது உடலுக்கு தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரிபாவ பொலேவெவ பகுதியை சேர்ந்த 10 வயதான சத்ரசா குமாரி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்த சிறுமி கிரிபாவ மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து சிறுமியின் பாட்டி நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

‘உயிரிழந்தவர் எனது பேத்தியாவார். அவரது தாய் தனது கணவரை விவாகரத்து செய்து மறுமணம் செய்யவுள்ளார். இதனால் பேத்தி என்னுடனேயே வசித்து வந்தார்.

பிராமணர் ஒருவர் தனது உடலுக்கு தீமூட்டி சொர்க்கத்திற்கு சென்றதாக செய்தியொன்றை கேட்ட எனது பேத்தியும் தனது உடலுக்கு தீமூட்டிகொண்டதாக’ உயிரிழந்த சிறுமியின் பாட்டி நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.