ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு

லீசிங் நிறுவனங்களுக்கு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு ஜனாதிபதி இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

லீசிங் நிறுவனங்கள், தவணைப் பணத்தை செலுத்த தவறுவோரின் வாகனங்களை கைப்பற்றும் முறை சட்டவிரோதமானது என்றும், ஒருபோதும் அதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

லீசிங் நிறுவனங்கள் இவ்வாறு வாகனங்களை கைப்பற்றுவதற்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவிப்பதில்லை என்றும், வாகனங்களை கைப்பற்றிய பின்னரே அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாத்கரமாக மேற்கொள்ளப்படுகின்ற இந்நடவடிக்கை சில சமயங்களில் பாரிய மோதல் நிலையை தோற்றுவிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாகனங்களை கைப்பற்றிய பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்கப்படுவதை மறு அறிவிப்பு வரும்வரை பொறுப்பேற்க வேண்டாம் என்று ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஊழுஏஐனு-19 பரவல் காரணமாக லீசிங் கடன் தவணைகளை ஆறு மாதங்களுக்கு இரத்து செய்யுமாறு ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.