ஜனாதிபதி பொது மக்களிடம் விடுத்துள்ள விஷேட வேண்டுகோள்

கவனக்குறைவாக செயற்பட்டால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைக்கமைய செயற்படுமாறு பொது மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரொனாவால் பல நாடுகள் அவதியுறும் நிலையில் இலங்கை குறிப்பிடத்தக்க வெற்றியடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.