ஜிஹாத் சிந்தனையுடைய நளீமீக்கள் அரச மூலஸ்தானங்களை ஆக்கிரமித்துள்ளனர்

சிந்தனையில் ஜிஹாத் கொள்கையை கொண்ட நளீமீக்கள் அரச மூலஸ்தானங்களை அதிகாரங்களை ஆக்கிரமித்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த நாட்டில் மிக பயங்கரமான இஹ்வானுல் முஸ்லிமீன் கொள்கையை போதிக்கும் ஜாமீயா நளீமியா கலாசாலையில் இருந்து பட்டம் பெற்று வெளியேறும் “சிந்தனை ஜிஹாத்” கொள்கையுடைய பட்டப்படிபை முடித்த நளீமீக்கள் அரச மூலஸ்தானங்களை ஆக்கிரமித்துள்ளனர்.

அவர்களே திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் பலவற்றில் நிர்வாகம் செய்கின்றனர் என குற்றம் சுமத்தினார்.

அவர்களே அரச தலைவர்களை சுற்றி இருந்து எம்மை அவர்களிடம் நெருங்கவிடாமல் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவிடாமல் தடுக்கின்றனர் என்றார்.

இஹ்வானுல் முஸ்லிம் கொள்கையினாலேயே சஹ்ரானும் அவனது கூட்டமும் உருவானது.

ஒஸ்தாத் மன்சூர் மற்றும் அவரது மிஸ்காத் பவுண்டேஷன் அல்குர்ஆன் எகடமி ஆகியவை இந்த நாட்டில் சிந்தனை ஜிஹாத்தை போஷிக்க செயற்படுகிறது என குற்றம் சுமத்தியுள்ளார்.