தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இவ்வளவு பேர் மதுக்கடை உரிமையாளர்களா?

இம்முறை நடைபெறும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள 80 சதவீதமானவர்களுக்கு சொந்தமாக மதுக்கடைகள் இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

சொந்தமாக மதுபான சாலைகள் இல்லாத வேட்பாளர்கள் இருந்தால் அவர்கள் பகிரங்கமாக அறிவிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேற்படி கூறினார்.

எதிர்வரும் தேர்தலின் போது தமது பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு இந்த மதுபான சாலைகள் மூலம் மதுபானம் விநியோகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.