தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள செய்தி

இம் முறை பொது தேர்தலில் வாக்களிப்புக்கு வழங்கப்படும் நேரத்தினை நீடிப்பது தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பதற்கான நேரத்தை மாலை 05 மணிவரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இம்முறை கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் தேர்தல் இடம்பெறுவதனால் வாக்களிப்பு நேரத்தை நீடிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.