தேர்தல் திகதி குறித்து மஹிந்த தேஷப்பிரிய விடுத்துள்ள அறிவிப்பு

‘அடுத்த இரண்டு நாட்களில் பல தரப்பினருடன் கூடி ஆராய்ந்து
தேர்தல் திகதியை 8 ஆம் திகதி தீர்மானித்து அறிவிக்கலாம் என்று நினைக்கிறோம்.

ஆணைக்குழு உறுப்பினர்களும் 8 ஆம் திகதி கூடி ஆராய்வோம்.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் வழங்கவுள்ள சுகாதாரத் துறை உத்தியோகத்தர்கள் குறைந்தபட்சம் ஜூன் 8 அல்லது 9 ஆம் திகதிக்குள் தமது விண்ணப்பங்களை வழங்கவேண்டும்.

நீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது தேர்தல் நடத்தலாம் என்று நினைத்து நோய் நிலைமை குறித்து மக்கள் அசட்டையாக இருக்கக் கூடாது. சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

முகக்கவசங்களை அணிந்து ஆரோக்கியமாக செயற்படவேண்டும். அரசியல்வாதிகளும் பெரியளவில் கூட்டங்களை நடத்தக் கூடாது. மக்களை அணிதிரட்டக் கூடாது.

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தேடும் நிலைமை நீடிக்கலாம். எனவே நாம் இவற்றுடன் வாழ நாம் பழக வேண்டும். காணாமற்போன மாகாண சபை தேர்தலையும் நாம் நடத்த வேண்டும் ”

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று நடந்த ஊடக மாநாட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *