நடிகை வனிதாவுக்கு இந்த மாதம் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?

நடிகையும் பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானவருமான வனிதாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

பீட்டர் பற்றி வனிதா கூறும்பொழுது “அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.