நவீன் திசாநாயக்கவிற்கு தலைவர் பதவியை வழங்கிய ரணில்

இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக முன்னாள் எம் பி நவீன் திஸாநாயக்கவையும் அதன் பொதுச் செயலாளராக ஆர்.யோகராஜனையும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை நியமித்துள்ளது.

இதற்கு முன்னர் இதன் தலைவராக இருந்த ஹரீன் பெர்னாண்டோ, செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் பதவிகளில் தொடர நீதிமன்றம் மூலம் தடையுத்தரவை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி இந்த நியமனங்களை வழங்கியுள்ளது.

தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக நவீன் இங்கு செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.