நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட சஜித்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பேராயர் மால்கம் கார்தினல் ரஞ்சித் தொடர்பில் முன்வைத்த கருத்துக்காக தான் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பேராயர் மால்கம் கார்தினல் ரஞ்சித் தொடர்பில் முன்வைத்த கருத்தானது வருந்ததக்கது என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் அரசியலில் தொடர்புபடுவதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குற்றம் சுமத்தியிருந்தார்.

மெதிரிகிரியவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்வின்போது அவர் இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.