பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள்

பொலிஸ் போதைவஸ்து ஒழிப்பு பிரிவின் நான்கு அதிகாரிகள் பணிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் போதைவஸ்து கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையிலேயே அவர்கள் பணிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

இரண்டு உதவி ஆய்வாளர்கள், இரண்டு காவலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.