பயங்கரவாதிகள் பெயர் பட்டியலில் ஞானசார தேரர்

கடந்த அரசாங்கத்தால் தான் ஒரு பயங்கரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டு பேஸ்புக் நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

இதன்காரணமாக பேஸ்புக் நிறுவனத்தால் தனது பெயர் மற்றும் புகைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கும் போதே ஞானசார தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

தான் பல சந்தர்ப்பங்களில் இந்த நாட்டில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் தகவல் வௌியிட்ட போதிலும் அது தொடர்பில் அவதானம் செலுத்தியது, அப்போதைய பாதுகாப்பு செயலாளரான தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மட்டுமே என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது அவர் நாட்டு ஜனாதிபதி என்பதால் அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்வதற்கு ஏதாவது வேலைத்திட்டங்களை மேற்கொள்வார் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.