பாகிஸ்தான் அணி வீரர்கள் மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் கொரொனா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் சதாப் கான், வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌப் மற்றும் இளம் வீரர் ஹைதர் அலி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு பயணமாகவுள்ள நிலையில், அதற்காக நேற்று முன்தினம் (21) கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சற்றுமுன்னர் பரிசோதனை முடிவுகள் வெளியாகிய நிலையில் இவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இவர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.