பாகிஸ்தான் கிரிக்கட் அணியினருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை – 10 பேருக்கு கொரோனா

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, Kashif Bhatti, Mohammad Hasnain, Fakhar Zaman, Mohammad Rizwan, Mohammad Hafeez, Wahab Riaz, Imran Khan ஆகிய வீரர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏற்கனவே நேற்றைய தினம் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்படி தற்போது வரை 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.